செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:36

எரியாத தெரு விளக்கால் அச்சம்திண்டுக்கல்: மாநகராட்சி பென்ஷனர் தெரு, வடக்கு ரதவீதியில் தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. ஊரடங்கு இருப்பதால் கடைவீதிகள் வெறிச்சோடியுள்ளன. இதனால் தெருவே இருட்டாக உள்ளது. இதைப் பயன்படுத்தி சமூகவிரோதிகளின் நடமாட்டமும் உள்ளது. ஆண்களே நடமாட அச்சமுள்ள நிலையில் பெண்களின் நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. மின்சார வாரியம் தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும்.

சூதாடிய 10 பேர் கைதுவடமதுரை: வேலாயுதம்பாளையம் மற்றும் டி. புதூர் பகுதிகளில் வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள நாடகமேடை, சுடுகாடு பகுதிகளில் இரு குழுக்களாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த காளிமுத்து 53, கருப்பையா 40, முருகேசன் 35, முருகன் 39, ராஜா 45, சக்திவேல் 48, பிரபாகர் 28 உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். பணம், சீட்டுக் கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி விற்ற மூவர் கைதுஎரியோடு: இந்த நகரில் தங்கராஜ் 51, பரமசிவம் 47, ஆகியோர் லாட்டரி சீட்டுகளை தயாரித்து விற்பனை செய்தனர். இவர்களிடம் பாகாநத்தம் கீதா 33, என்பவரும் வேலை பார்த்து வந்தார். ரகசிய தகவலின்பேரில் லாட்டரி சீட் தயாரித்த இடத்தில் சோதனை நடத்திய எரியோடு போலீசார் மூவரையும் கைது செய்தனர். லேப்டாப், பிரின்டர் உள்பட உபகரணங்கள், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுள் பரமசிவம் கடந்தாண்டும் இதே காரணத்திற்காக கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைரோட்டில் சாரல்கொடைரோடு: அம்மையநாயக்கனூர் பகுதியில் சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மூன்று நாட்களாக, மாலை நேரங்களில் மேகமூட்டத்துடன் பலத்த காற்று வீசுகிறது. கொடைரோடு, பள்ளபட்டி, ஜல்லிபட்டி, பெருமாள் கோவில்பட்டி, காமலாபுரம் பகுதியில் சாரல் மழை பெய்தது. தொடரும் சாரலால் அக்னி வெயிலின் தாக்கம் ஓரளவு தணிந்திருந்தது. வரத்து வாய்க்கால் நீராதாரங்களில் குறிப்பிடத்தக்க நீர் வரத்து இல்லை.

மூதாட்டியிடம் தோடு பறிப்புகள்ளிமந்தயம்: கே.கீரனூரைச் சேர்ந்த பழனிச்சாமி கவுண்டர் மனைவி செல்லம்மாள் 75. தோட்டத்து வீட்டில் வசிக்கிறார். நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவரது காதில் இருந்த அரை பவுன் தோட்டை பறித்து தப்பிவிட்டார். நான்கு நாட்களுக்கு முன்பு கருப்பதேவன் பட்டி அருகே தோட்டத்து சாலையில் இதேபோல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. போலீசார் ரோந்து சென்றால்தான் இவற்றை ஒழிக்க முடியும். போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறையை போக்க வேண்டும்.

இலவச பயணம் துவக்கம்வத்தலக்குண்டு: பெண்களுக்கான இலவச பஸ் பயணம் நேற்று துவங்கியது. தொ.மு.ச. வத்தலக்குண்டு கிளை தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துமணி வரவேற்றார். அரசு டிப்போ கிளை மேலாளர் நாகபாரதி துவக்கி வைத்தார். தொ.மு.ச. நிர்வாகிகள் பங்கேற்றனர். துணைச் செயலாளர் தென்னவன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X