அரிது... அரிது... இந்த வாய்ப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:46

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர், அமைச்சராகி உள்ளனர். கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பை, மாநில நலனுடன் சேர்த்து அர்ப்பணிப்புணர்வுடன் அமைச்சர்கள் செயலாற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.காங்கயம் தொகுதியில் வென்ற சாமிநாதன் செய்தித்துறை அமைச்சராகவும், தாராபுரம் தொகுதியில் வென்ற கயல்விழி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்.


இதன்மூலம், திருப்பூர் மாவட்டத்துக்கு இரு அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.வழக்கமாக, ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்படுவது வழக்கம். திருப்பூரில், மூன்று தி.மு.க., வேட்பாளர்கள் வென்ற நிலையில், இருவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் மனு மீது தீர்வு


திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சர்களாகியிருக்கும் இருவரும், இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கமாக, வாரந்தோறும், மாவட்ட அளவிலான குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இவற்றில், மனுக்கள் மலைபோல் குவிகின்றன. ஆனால், மனுக்கள் மீதான நடவடிக்கைகளும், நிஜத் தீர்வுகள் குறைவானவையாக தான் இருக்கின்றன. பல மனுக்களுக்கான தீர்வு, 'நடவடிக்கை எடுக்கப்படும்; பரிசீலிக்கப்படும்' என்பதோடு நின்று விடுகின்றன.



அதிகாரிகளின் நேரடி நடவடிக்கை என்பதோடு நில்லாமல், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய செயல்பாடு மூலம், இத்திட்டத்தை வெற்றிகரமாக்க முடியும்.அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்துவதில், வருவாய்த்துறை உட்படபல ஊழியர்களது உழைப்பு கழிகிறது. சில நேரங்களில், ஆக்கப்பூர்வ திட்டங்களை மக்களுக்கு நேரடியாக களத்தில் செயல்படுவதற்கு இயலாத நெருக்கடி, ஏற் பட்டு விடுகிறது. இதை சீர்துாக்கி, அரசு திட்டங்களை செயல்படுத்தும் அதே தருணம், மக்களின் நலனை முதன்மையாக கொண்டு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் அமைச்சர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.



தொழில் வளர்ச்சியில் கவனம்ஏற்றுமதி மற்றும் தொழில் நகராக திகழும் திருப்பூர், மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பு. தொழில்துறையினர், சிறிய நெருக்கடிகளை சந்தித்தாலும், அது, தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அந்த பிரச்னைக்கு மத்திய அரசோ, மாநில அரசோ தீர்வு காண வேண்டியிருக்கும்.இதற்கான தீர்வை, மாநில அரசின் கவனத்துக்கு முதலில் கொண்டு செல்ல வேண்டியதும், அதன் தீவிரத்தன்மையை அரசு புரிந்து கொண்டு செயலாற்றுவதற்கும் உரிய நடவடிக்கைக்கு, அமைச்சர்கள்தான் துணைபுரிய வேண்டும்.பஞ்சு மெத்தையல்ல பதவி; கிடைத்தற்கரிய அமைச்சர் பதவி வாய்ப்பை, மாவட்ட நலனுக்காக கூடுதல் அக்கறையோடு பயன்படுத்தினால், அது மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X