ஒன்றரை மாதத்தில் 'அதிரடி' மாற்றம்: கோவை மாநகர போலீசில் தொடருமா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:53

கோவை:ஒன்றரை மாதத்தில், கோவை மாநகர போலீசில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர வேண்டும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த மார்ச், 23ம் தேதி கோவை மாநகர போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசிர்வாதத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. புதிய அரசு பொறுப்பேற்ற உடன், நுண்ணறிவுப் பிரிவின் ஏ.டி.ஜி.பி.,யாக நேற்று முன்தினம் அவர் நியமிக்கப்பட்டார். மேற்கு மண்டல ஐ.ஜி., அமல்ராஜ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க உள்ளார்.கடந்த ஒன்றரை மாதங்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், தேர்தல் சுமுகமாக நடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். காந்திபுரம் பகுதியில், ஓட்டலில் தாக்குதலில் ஈடுபட்ட எஸ்.ஐ., ஒருவரை சஸ்பெண்ட் செய்தார். அதேபோல், பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த, ஏழு உளவுத்துறை போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றினார்.சமீபத்தில், போலீஸ் ஸ்டேஷன் நுண்ணறிவு பிரிவு காவலர் (ஸ்டேஷன் ஐ.எஸ்.,) பணியை நீக்கி உத்தரவிட்டார். இவ்வாறு பணியில் இருந்த ஒன்றரை மாதத்தில், பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார். தற்போது அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரியும் நடவடிக்கையை தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.'கோவைக்கு நன்றி'பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தனது முகநுால் பக்கத்தில்,'கோவையில் குறைந்த காலம் பணிபுரிந்தாலும், போலீஸ் துறைக்கு மதிப்பு சேர்த்தது மகிழ்ச்சி. 1998 - -2000க்கு இடையில் நகரத்தில், ஏ.சி.பி., மற்றும் டி.சி.பி., ஆக பணியாற்றியதால், கமிஷனராக இருந்த இந்த குறைந்த காலம் ஒரு ஆச்சரியமாக இருந்தது. உங்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை எப்போதும் பின்பற்றவும். வீட்டில் தங்கி பாதுகாப்பாக இருங்கள். கோவைக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202122:17:29 IST Report Abuse
Ram Pollachi அன்புள்ள ஐயா! தேர்தல் ஆணையம் மற்றும் புதிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உங்களின் நன்றியை முதலில் சொல்லுங்கள். சினிமாவில் வரும் போலீசுக்கு கிடைக்கும் மரியாதை கூட நிஜ போலீசுக்கு இல்லை. கீழ்மட்ட காவலர்கள் தவறு செய்தால் சஸ்பென்ட், ஆயுதபடைக்கு மாற்றம். அதே உயர் அதிகாரிகள் செய்தால் சங்கம் காப்பாற்றிவிடும் அல்லவா? சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி இவை இரண்டும் ஒரே குடையின் கீழ் வந்தால் அனைத்தும் சரியாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X