கொள்முதல் விலை உயரவில்லை: பால் முகவர் சங்கம் விளக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
01:03

திருப்பூர்:கொள்முதல் விலையை உயர்த்தியதாக, வெளியாகும் தகவலை நம்ப வேண்டாமென, ஆவின் பால் முகவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.கடந்த, 2019 ஆக., 19 முதல், ஆவின் பால் விற்பனை விலையில், ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, நேற்று முன்தினம், விற்பனை விலையில், மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.இது தொடர்பாக, 7ம் தேதியிட்ட அரசாணை 'வாட்ஸ் ஆப்' மூலம் பரவியது. அதில் உள்ள தகவல்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத சிலர், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, தவறான தகவல்களை பரப்பி விட்டனர்.ஆவின் பால் விற்பனை விலையில் மட்டும், மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது; கொள்முதல் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை என, ஆவின் அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.தமிழக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டபோது,''கடந்த, 2019 தகவல்களுடன் வெளியான அரசாணையால், சிலர் குழப்பம் அடைந்துள்ளனர். விற்பனை விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது; கொள்முதல் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவலை பால் உற்பத்தியாளர்கள் நம்ப வேண்டாம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202120:14:10 IST Report Abuse
ஆப்பு தினமலரில் கூட பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதாக செய்தி வந்ததே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X