மீனவர்களுக்கு உதவ 'ஸ்டார்ட் அப்' வந்தாச்சு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
01:06



மீன் பிடிக்கும் வலை, இணையதள வலையை சந்தித்தால் என்ன நடக்கும்? மீனவர்களுக்கு சங்கடமில்லாமல் அதிகமான மீன்கள் கிடைக்கும், மீனவரின் பிரச்னையும் குறையும். இது, 'ஒடகு' என்ற, 'ஸ்டார்ட் அப்' கம்பெனி மூலம் சாத்தியமானது.கடலில் மிகத் தொலைவில் செல்லும்போது கடற்பாறைகள் மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு பெரிய தொல்லை. மீனவர்கள் வலையை அந்த பகுதிகளில் வீசும்போது அந்த வலைகள் பாறைகளில் சிக்கி அறுந்து விடும். அதன்பின், மீன் பிடிக்க முடியாமல் போய்விடும். இது தவிர அந்த வலைகளை சரிசெய்ய பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.மீனவ குடும்பத்தில் பிறந்த சேவியர் லாரன்ஸ் தந்தையுடன் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இந்த சோகங்களை பார்த்திருக்கிறார். படித்து முடித்தவுடன் இதற்கு ஒரு வழி காண வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு, கடல் பயணத்துக்கு ஒரு ஜி.பி.எஸ்., கருவியை ஒரு செயலியுடன் பொருத்துமாறு கண்டுபிடித்தார்.அது மீனவர்களுக்கு கடலுக்குள் அடியில் இருக்கும் தடங்கல்களை கண்டுபிடித்து சொல்லும் கருவியாக அவர்களுக்கு இருக்கிறது, கடற்பாறைகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.இணைப்பு பாலம்பல நேரங்களில் கடல் எல்லைகளை தாண்டும்போது வெளிநாட்டு கடற்படை ரோந்து கப்பல்கள் நம்முடைய மீனவர்களை பிடித்து சென்று விடுவது உண்டு. இந்த செயலி மீனவர்களுக்கு கடல் எல்லைப் பகுதிகளை சுட்டிக் காட்டுவதால், எல்லைகள் பயமில்லாமல் மீன் பிடிக்க வசதியாக இருக்கிறது. இந்த கருவி டிஜிட்டல் சிக்னல்களை உபயோகித்து மீன்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடித்து சொல்கிறது. இதனால், எரிபொருள் சேமிப்பு மிகவும் அதிகமாக கிடைக்கிறது. மேலும், மீனவர்கள், மீன் படகு உரிமையாளர்கள், வாங்குபவர்கள், மீன் வளத்துறை ஆகியவற்றை இணைக்கும் ஒரு பாலமாக இருக்கிறது.இதனால், ஒரு நாளைக்கு எவ்வளவு மீன் பிடிக்கப்பட்டது என்று தெரியும். எந்த பகுதியில் இருந்து இந்த மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது (கியூ.ஆர். கோடு மூலமாக) என்பதையும் நுகர் வோர் கண்டுபிடிக்கலாம்.இந்தியாவின் கடற்பகுதி, 7,500 கி.மீ., நீளம் கொண்டது. கடற் கரையை சுற்றி இருக்கும், ஏறத்தாழ, 4,000 கிராமங்களில் வசிக்கும் மக்கள், மீன் பிடித் தலையே ஆதாரமாக கொண்டுள்ளனர். மீனவர்களின் சிரமங்களை போக்க, ஒரு மீனவரின் மகன் கண்டு பிடித்த இந்த செயலி இன்று பலருக்கு உதவியாக இருக்கிறது.இந்தியாவின் சிறந்த, 10 ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் ஒன்றாகவும் இந்த கம்பெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இணையதளம் www.odaku.in சந்தேகங்களுக்கு: இ மெயில்: sethuraman.satha ppan@gmail.com, மொபைல் போன்:98204 -51259, இணைய தளம் www.startup and business news. - சேதுராமன் சாத்தப்பன் -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X