நீட்டிப்பு புதுச்சேரியில் ஊரடங்கு 24ம் தேதி வரை ... அத்தியாவசிய பணிகளுக்கு தடையில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
04:51

புதுச்சேரி,-புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது



.புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மே 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் செயல்பாட்டில் உள்ளது. அத்தியாவசிய கடைகள், சேவை நிறுவனங்கள் மட்டும் இரவு 10 மணி வரை இயங்கவும், பிற கடைகளுக்கு தடையும் விதிக்கப்பட்டது.



அண்டை மாநிலமான தமிழகத்தில், நாளை (10ம் தேதி) முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செயலர் அசோக்குமார் பிறப்பித்த உத்தரவு:l புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமலில் இருக்கும். l அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள், கார்டன்கள் முழுதும் ஊரடங்கு நாட்களில் மூடி இருக்க வேண்டும். l சமூகம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம் சார்ந்த விழாக்கள் திறந்தவெளி அல்லது அறைகளில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.12 மணி வரைl மளிகை கடை, காய்கறி கடை, உணவகங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவன கடைகள் மதியம் 12.௦௦ மணி வரை குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்கலாம். பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்க அனுமதியில்லை.l உணவகங்களில் பார்சல் உணவு மற்றும் வீட்டுக்கு சென்று உணவு வினியோகிப்பது, ஓட்டல் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் அறைக்கு சென்று மட்டும் உணவு வினியோகத்திற்கு அனுமதிக்கப்படும். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.



l டீ கடைகளில் அமர்ந்து டீ குடிக்கவும், கூட்டமாக சுற்றவும் அனுமதியில்லை.l பால் பண்ணை, பால் சப்ளை, பால் பூத், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள், பாராமெடிக்கல்ஸ், கண்ணாடி கடைகள், மருந்து உபகரணங்கள், செய்தித்தாள் வினியோகம், அவசர ஊர்தி மற்றும் மருத்துவ அவசர கால சேவைகள் அனுமதிக்கப்படும்.வழிபாட்டு தலங்கள்l அனைத்து மத வழிபாட்டு தலங்களில் பொது தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. நித்ய பூஜைகள், சம்பிரதாயங்கள் செய்ய அர்ச்சகர்கள் ஊழியர்களுக்கு அனுமதி உண்டு. l கோவில்களில் திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. கும்பாபிஷேகம் செய்ய பொது மக்கள் அனுமதியின்றி கோவில் குருக்கள் ஊழியர்களை கொண்டு அனுமதிக்கப்படும்.l திருமண நிகழ்ச்சிகளில் முன்பு 50 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது திருமண நிகழ்ச்சிகளில் 25 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. l இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.அத்தியாவசிய அலுவலகங்கள்l தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கலாம். பெட்ரோல் பங்க், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏ.டி.எம்.,கள், தொலை தொடர்பு, இணையதள சேவை, ஒளிபரப்பு, கேபிள் சேவை, தகவல் தொழில்நுட்ப சேவை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அலுவலகங்கள் மதியம் 12.00 மணி வரை இயங்கலாம். l அனைத்து மின்னணு வர்த்தக சேவைகளுக்கு அனுமதி உண்டு. அவசிய காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை.போக்குவரத்துl சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து பஸ், ஆட்டோ, டாக்சி, விவசாய பொருட்கள் போக்குவரத்து மற்றும் விவசாயம் சம்பந்தமான செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். பஸ்களை 50 சதவீத இடங்களுடன் இயக்கலாம்.l டாக்சி போன்றவற்றில் டிரைவர் மற்றும் மூன்று நபர்களும், ஆட்டோக்களில் டிரைவர் மற்றும் இரண்டு பேர் அனுமதிக்கப்படுவர். l அத்தியாவசிய பணிகளில் பொருட்களை எடுத்து செல்வோர் கட்டாயம் அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X