விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கொரோனாவிற்கு 7 பேர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
05:03

விழுப்புரம்;விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு மேலும் 7 பேர் இறந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 21,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ப.வில்லியனுாரை சேர்ந்த 63 வயது முதியவர், வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்த 85 வயது முதியவர், அய்யங்கோவில்பட்டை சேர்ந்த 42 வயது ஆண், விழுப்புரம் கே.கே. ரோட்டை சேர்ந்த 68 வயது மூதாட்டி, தேவநாத சுவாமி நகரை சேர்ந்த 73 வயது மூதாட்டி என 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால், கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. 2,647 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 319 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 22,031 ஆக உயர்ந்துள்ளது. இவுர்களில் 19,245 பேர் குணமடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 13,547 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த பரிசோதனையில் புதிதாக 121 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 13,668 ஆக உயர்ந்தது. இவர்களில் 12,688 பேர் குணமடைந்துள்ளனர். 862 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.இருவர் பலி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 59 வயது பெண் பெரம்பலுார் அரசு மருத்துவமனையிலும், 69 வயது முதியவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X