கட்டணமில்லா பயண திட்டத்தால் மகளிர் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
05:09

கள்ளக்குறிச்சி; மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டத்திற்காக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 அரசு பணிமனைகளில் இருந்து 105 பஸ்கள் இயக்கப்படுகிறது.அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் உள்ள சாதாரண கட்டண டவுன் பஸ்களில், பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உட்பட மகளிர் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இதையொட்டி, கள்ளக்குறிச்சி டெப்போவில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும், உள்ளூர் பஸ்களின் முன்புற கண்ணாடியில் 'மகளிர் கட்டணமில்லா பயணம்' என்ற ஸ்டிக்கர் நேற்று முன்தினம் இரவு ஒட்டப்பட்டது. நேற்று அதிகாலையில் இருந்து, உள்ளூர் அரசு பஸ்களில் பயணித்த மகளிர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. இதனால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பெண்கள் அரசு பஸ்களில் நேற்று பயணித்தனர். நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பஸ்களில் கூட்டம் நேற்று அலைமோதியது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ள 5 பணிமனைகளில் கள்ளக்குறிச்சி - 30, சின்னசேலம் - 15, சங்கராபுரம் - 14, உளுந்துார்பேட்டை - 20, திருக்கோவிலுார் - 26 என மொத்தம் 105 சாதாரண கட்ட டவுன் பஸ்கள், மகளிருக்கு கட்டணமில்லாமல் இயக்கப்படுகிறது. இத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 130 சாதாரண கட்டண டவுன் பஸ்கள், மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்திற்காக இயக்கப்படுகிறது.தினசரி பயணிக்கும் மகளிர்களின் எண்ணிக்கையை கணக்கிட விரைவில் 'டம்மி டிக்கெட்' (0 ரூபாய் ரசீது) தரப்பட உள்ளது. மலை கிராமங்களுக்கு செல்லும் மினிபஸ், நகர்புற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், விரைவு மற்றும் குளிர்சாதன பஸ்களில் பயணிக்கும் மகளிர் கட்டாயம் பயண கட்டணம் செலுத்த வேண்டும்.வருமானமிழந்த ஆட்டோ ஓட்டுநர்கள்:கிராமபுறங்களில் இருந்து நகர்புறத்திற்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் பஸ்களை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ் வரும் என்பதால், ஆட்டோக்களில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், அரசின் இந்த அறிவிப்பினால் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என சில மணி நேரம் காத்திருந்து அரசு பஸ்களில் பயணிக்க விரும்புகின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பஸ்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X