அரசு மருத்துவக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
அரசு மருத்துவக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
05:10

கள்ளக்குறிச்சி-சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள கொரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவது குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில், 829 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரியில் ஆக்ஸிஜன் வசதியுடன் 325 படுக்கைகள், 100 சாதாரண படுக்கைகள், வெண்டிலேட்டருடன் 25 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 450 படுக்கைகள் உள்ளது. மேலும், 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜனும், 319 ஆக்ஸிஜன் உருளையும் தயார் நிலையில் உள்ளது. நோய் தொற்றினால் பாதிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தொற்றினால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கை வசதிகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரியில், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவது குறித்து கலெக்டர் கிரண்குராலா நேற்று ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X