ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகரிக்க ஏற்பாடு; கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
05:20

கடலுார்; கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்துள்ளதால், கடலுார் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி அதிகரிப்பதுடன், தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, நேற்று கடலுார் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது, 2,099 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதில், 498 பேர் பிற மாவட்டங்களிலும், 1,591 பேர் கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று அதிகரிப்பதால், மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இன்னும் சில படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகரிப்பதுடன், தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கடலுார் அரசு மருத்துவமனையில் 168 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. 10 நாட்களில் கூடுதலாக 166 படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்படும்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும். அவர்கள் நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா, தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வேண்டுமா. அல்லது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாமா என ஆலோசனை வழங்குவார்கள்.அதன் அடிப்படையில் கொரோனா நோயாளிகள் செயல்பட வேண்டும். மாவட்டத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா மருந்து வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது.அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்றால் முகக் கவசம் அணிய வேண்டும்.



சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையங்களில், மாவட்டத்தில் 3,567 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது 2,666 படுக்கைகள் காலியாக உள்ளன.தற்போது, 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு ககன்தீப்சிங் பேடி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X