இலவச பஸ் பயணம்:பெண்கள் மத்தியில் வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

09 மே
2021
07:06
பதிவு செய்த நாள்
மே 09,2021 05:29

அனைத்து பெண்களும், சாதாரண கட்டண பஸ்களில் இலவச பயணம் செய்யும் திட்டம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இது குறித்து பெண்கள் கருத்து:சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், சென்னையில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அரசு, சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சென்னை பெண்கள், இந்த திட்டத்தில் அதிகம் பயன்பெறுவர்.ஜெ. நந்தினி, 22 கல்லுாரி மாணவி.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, இலவச பயணம் என்பது, வரப்பிரசாதமாக அமையும். உதாரணமாக, நாளொன்றுக்கு, 50 ரூபாய் வரை, பணியிடத்திற்கு சென்றுவர, பெண் ஒருவர் செலவிடுகிறார் என கணக்கிட்டால், மாதத்திற்கு, 1,500 ரூபாய் வரை செலவாகும்; தற்போதைய, இலவச கட்டண அறிவிப்பால், அத்தொகை மிச்சமாகும்.டி. உதயவாணி, 47 சிட்லபாக்கம்.இலவச பயண அறிவிப்பால், ஆட்டோக்களையோ, கால் டாக்சிகளையோ நம்பாமல், பெண்கள் எந்த இடங்களுக்கும், தடையின்றி தயக்கமின்றி செல்ல முடியும். இரவு நேரங்களில், இலவசமாக பஸ்களில் பயணிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பாக அமையும்.கே.லஷ்மி கிருஷ்ணகுமார், 43 குரோம்பேட்டை.அரசின் அறிவிப்பால், வீட்டின் மாதாந்திர பட்ஜெட் செலவில், பெண்களுக்கு பெரும் தொகை மிச்சமாகும். தற்போது, சாதாரண பஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலவச பயண அறிவிப்பை, அரசு விரிவுபடுத்த வேண்டும்.சொகுசு மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்திலும், பெண்களுக்கு, 25 முதல் 50 சதவீதம் வரை, கட்டண சலுகை வழங்கினால், பாதுகாப்பாக அமையும்.டாக்டர் எஸ்.விஜயலட்சுமி, 52மகப்பேறு துறை நிபுணர், பூந்தமல்லி.ஊர் பகுதிகளில், காய்கறி, மீன் என, வியாபாரத்திற்கு செல்லும் பெண்களுக்கும், பின்தங்கிய குடும்பத்தில் உள்ள, பெண்கள் வெளியே வரவும், இத்திட்டம் உதவும்.

அதேபோல், பெண்கள் மேம்பாட்டிற்கும், திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.மீனா சத்யமூர்த்தி, 27 ஜாபர்கான்பேட்டை.சாதாரண பஸ்களின் நிலை படுமோசமாக உள்ளது. இதனால், அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. ஆகையால், பஸ்சை சீர் செய்து, எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்படியானால், இந்த திட்டம், பெண்களுக்கு உதவியாக இருக்கும்.கே.வேலு மணி, 57 வளசரவாக்கம்.- நமது நிருபர்கள் குழு -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-மே-202121:52:30 IST Report Abuse
bal இந்த சென்னை மக்கள் பாதி விழுக்காடு வோட்டு போடவில்லை..இன்னும் ஏன் அவர்களுக்கு சொகுசு கொடுக்கிறீர்கள்..அதோடு நிறைய பெண்கள் மட்டும் பஸ்கள் ஓடுகின்றன...அதில் ஒரு பைசா கூட வருமானம் இருக்காது...அதோடு எவன் வரிப்பணத்தை எவன் இலவசமா கொடுப்பது...
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
09-மே-202119:07:10 IST Report Abuse
Poongavoor Raghupathy துட்டு இல்லாமல் வெறுமனே கிடைத்தால் யாருக்கு கசக்கும். போக்குவரத்து துறைகளில் ஒய்வு பெற்றவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏற்கனவே நஷ்டத்தில் நடக்கும் துறையில் பெண்களுக்கு இலவச பயணத்தை ஸ்டாலின் அவர்கள் தான் தேர்தலில் வெற்றிபெற கொடுத்து இருக்கிறார்.ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டார் மகளிர் செலவில்லாமல் பஸ்களில் செல்கிறார்கள். ஒய்வு பெட்ரா போக்குவரத்து தொழிலாளிகளின் கதி என்னவாகப்போகிறது. பார்க்கலாம்.
Rate this:
Cancel
09-மே-202117:32:26 IST Report Abuse
ஆப்பு ஓசிக்கு மயங்காத தமிழன் உண்டோ... எந்நேரமும் இலவசமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X