திருவிழா போல் கூடிய கூட்டம் திக்குமுக்காடிய திருவொற்றியூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
12:57

திருவொற்றியூர்: முழு ஊரடங்கு எதிரொலியாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் திருவிழா போல் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகம் முழுதும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை 6000த்தை கடந்து பதிவாகி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.அதன்படி நாளை துவங்கி 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏதுவாக நேற்றும் இன்றும் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.இருப்பினும் ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை, பலசரக்கு மற்றும் டீக்கடைகள் மதியம் 12:00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.



ஆனால் மக்கள் முழு ஊரடங்கு அறிவிப்பை காரணம் காட்டி முக்கிய சந்தைகளுக்கு கூட்டமாக படையெடுத்தனர்.திருவொற்றியூரின் சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, தேரடி, பட்டினத்தார் கோயில் தெரு, மார்க்கெட், விம்கோ நகர் மார்க்கெட், அஜாக்ஸ் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பொருட்களை வாங்க மக்கள் திருவிழா போல் கூடினர்.எர்ணாவூர் மார்க்கெட், கத்திவாக்கம் பஜார், தாழங்குப்பம் சந்திப்பு, மணலி மார்க்கெட், பாடசாலை தெரு, சின்னமாத்துார், மாத்துார், எம்.எம்.டி.ஏ. மணலி, புதுநகர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டமாக முண்டியடித்து பொருட்களை வாங்கி சென்றது தொற்று பரவல் அச்சத்தை ஏற்படுத்தியது.



இன்றும் கடைகள் முழு நாள் செயல்படவிருக்கும் நிலையிலும் பற்றாக்குறை ஏற்படும் என்ற பயத்தில் மக்கள் கூட்டமாக கூடி பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றதால் மதியத்திற்குள் சில பொருட்கள் விற்றுத் தீர்ந்தன.குறிப்பாக காய்கறி, பலசரக்கு, நொறுக்கு தீனி கடைகளில் அதிகளவில் கூட்டம் கூடியதை காண முடிந்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
11-மே-202108:04:14 IST Report Abuse
sankar இதுதான் ஊரடங்கு லட்சணம்
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-மே-202116:19:10 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த மாதிரி சமயங்களில், எல்லோருக்கு சிறிதானும் கிடைப்பதை உறுதி செய்ய, கடைகள் ரேஷன் முறையை கொண்டுவரவேண்டும் ... ஒருவருக்கு 2 அல்லது 4 லிட்டர் பால், 10 kilo அரிசி, 5 பிஸ்கெட் பாக்கெட்டுகள் என்று வரைமுறை வைக்கவேண்டும் .... இதை கடைக்காரர்களே செய்யவேண்டும் ......இதை ஆன்லைன் வர்த்தகத்தில் நடைமுறைப்படுத்துகிறார்கள்.. எல்லோருக்கும் சிறிது கிடைக்கிறது ..... ஒருவரே அள்ளிச்செல்ல விடுவதில்லை ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X