மதுரையில் தொடங்கியது ‛ரெம்டெசிவிர்' விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
13:04

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் கொரோனா சிகிச்சைக்கான, 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனையை கலெக்டர் அன்பழகன் துவக்கி வைத்தார்.



அவர் கூறியதாவது:நோயாளியின் மருத்துவச் சான்று, ஆதார் நகல், பாதிப்பின் தன்மை குறித்த சான்றிதழுடன் வந்தால் ரெம்டெசிவிர் வழங்கப்படும். பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் பாகுபாடின்றி வழங்கப்படும். ஒரு குப்பியின் விலை ரூ.1,569. அதிகபட்சமாக ஆறு குப்பிகள் தரப்படும். ஆறு குப்பிகள் வாங்கினால் ரூ.9,408 என சலுகை விலையில் வழங்கப்படுகிறது.



இதை வாங்கி வெளியில் விலைக்கு விற்க முடியாத வகையில் முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வழங்குகிறோம். யாராவது வெளியில் விற்பனை செய்தால் சுகாதார இணை இயக்குனர் மூலம் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் முதற்கட்டமாக, 600 குப்பிகள் இங்கு வந்துள்ளன. தேவைக்கேற்ப தொடர்ந்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மதுரையில் இரண்டு ஆக்ஸிஜன் தொழிற்சாலைகள் மூலம், 100 சதவீத உற்பத்தி நடக்கிறது. பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனைக்கு, 26 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் கொள்ளளவுள்ள டாங்க் உள்ளது. தொடர்ந்து டாங்க் நிரப்பப்பட்டு வருகிறது என்றார்.



மதுரை காந்தி மியூசிய ரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் காலை, 8:00 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படுகிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X