கடனும் கிடைக்கல, நகையும் திருப்பித் தரல! வேதனையில் தவிக்கும் விவசாயிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:36

அன்னுார்:வேளாண் கூட்டுறவு வங்கிகளில் மூன்று மாதங்களாக கடன் தராமல், நகையும் திருப்பித் தராததால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன், பயிர் நகைக்கடன் மற்றும் கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட நகைக்கடன்களை, முந்தைய அரசு தள்ளுபடி செய்து, கடந்த பிப்ரவரி முதல் வாரம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவால், அன்னுார் வட்டாரத்தில், 17 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். எனினும், அவர்களுக்கு இதுவரை நகை திருப்பித் தரப்படவில்லை; கடனும் மீண்டும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க, வட்டாரத் தலைவர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:விவசாயிகள் கடந்த ஜனவரி 31ம் தேதி வரை வைத்திருந்த, நிலுவை பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது.தள்ளுபடி செய்யப்பட்ட கடனில், 10 சதவீதம் தொகையை, கூட்டுறவு சங்கங்கள் பிடித்தம் செய்து கொண்டன. அதன் பிறகு மூன்று மாதங்கள் ஆகியும், இதுவரை மீண்டும் பயிர்க் கடன் வழங்கவில்லை. இதனால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், நகைகளை அடமானம் வைத்து, கடன் பெற்றவர்களின் நகைக் கடன், தள்ளுபடி செய்யப்பட்டது என அறிவித்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நகைகளையும் திருப்பித் தரவில்லை.அரசு விரைவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட நகைக் கடன்களை சரிபார்த்து, அந்த நகைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.சுய உதவிக்குழு கடன்கூட்டுறவு சங்கங்களில் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களும், குழுக்களிடம் இதை உறுதிப்படுத்தின. ஆனால், தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றை, இதுவரை வழங்கப்படவில்லை.எனவே, தமிழக அரசின் பிப்ரவரி மாத அறிவிப்பு அமலாகுமா அல்லது திடீரென கடனை மீண்டும் திரும்ப செலுத்த உத்தரவிடப்படுமா என்ற அச்சத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.இதுகுறித்து, தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என, சுய உதவி குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X