இன்று முதல் ஊரடங்கு; பாம்பன் பாலம் வெறிச் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இன்று முதல் ஊரடங்கு; பாம்பன் பாலம் வெறிச்
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:43


ராமேஸ்வரம் : இன்று ஊரடங்கு துவங்க உள்ள நிலையில்நேற்றே பாம்பன் பாலத்தில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.



இன்று முதல் மே 24 வரை முழு ஊரடங்கை யொட்டி நேற்று ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி, மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் வெளியூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்ததால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் போக்குவரத்து, சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X