இலங்கையில் மூன்று மீனவர்கள் கைது? | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இலங்கையில் மூன்று மீனவர்கள் கைது?
Added : மே 09, 2021 | |
Advertisement
 

திருவாடானை : இலங்கையில் தொண்டியை சேர்ந்த மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.



இலங்கையில் சில தினங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் கைது செய்யபட்டதாகவும், அவர்கள் அணிந்திருந்த பனியன்களில் பிரபாகரன் படம் போட்டிருந்ததாகவும் தகவல் பரவியது.இதனால் தொண்டி, தேவிபட்டினம் மரைன் போலீசார் எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் நீண்ட நாட்களாக திரும்பாமல் உள்ளார்களா என்று விசாரித்தனர்.

ஆனால் கடலுக்கு சென்ற அனைத்து மீனவர்களும் வீடுகளுக்கு திரும்பிவிட்டதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.இச் சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் பகுதிகளுக்கு போலீசார் தகவல் தெரியபடுத்தியுள்ளனர். அங்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X