பரமக்குடியில் தரைப்பால தண்ணீரில் பயணம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடியில் தரைப்பால தண்ணீரில் பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:44

பரமக்குடி : பரமக்குடி - எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் வைகை ஆறு தரைப்பாலத்தில் தேங்கிய மழை நீருக்கு மத்தியில் மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.



பரமக்குடி நகராட்சியில்வைகை ஆற்றின் மறுகரையான எமனேஸ்வரம்பகுதியில் 8 வார்டுகள்உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றின் இடையே தரைப்பாலம் அமைக்கப்பட்டது.பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் -எமனேஸ்வரம்-நயினார்கோவில் ரோட்டை இப்பாலம் இணைக்கிறது. இப்பாலம் கட்டியது முதல் திறப்பு விழா காணாமலேயே உள்ளது. மேலும் தொடர்ந்து வந்த பல்வேறு வெள்ளப்பெருக்கு காலங்களில் மணல் அரிப்பால் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் அரித்து சரிந்துஉள்ளன. இந்நிலையில் பாலத்தின் மையப்பகுதி பள்ளமாகி வருகிறது.



சிறிதளவு மழை பெய்யும் நிலையிலும் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தும் பாலத்தின் ஸ்திரத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.திறப்பு விழா காணாத பாலத்தை எந்த துறையினர் பராமரிப்பது என அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் பராமரிப்பு நிதி ஒதுக்கப்படாமல் பாலம் உடையும் தருவாயில் உள்ளது.ஆகவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நன்மை கருதி சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X