முதுகுளத்துார், திருவாடானையில் கொட்டித் தீர்த்த மழை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
முதுகுளத்துார், திருவாடானையில் கொட்டித் தீர்த்த மழை
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:46

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் திடீரென்று மழை கொட்டியது.



முதுகுளத்துார் மற்றும் கீழக்காஞ்சிரங்குளம்,சித்திரங்குடி, எட்டிச்சேரி உட்பட அதனை சுற்றியுள்ள பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்த து.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. முதுகுளத்துாரில் பெய்த மழையால் செல்வி அம்மன் கோயில் தெரு, வடக்கூர், நாடார் தெரு, காந்திநகர்,அரசு மருத்துவமனை தெரு,கிழக்கு தெரு உட்பட பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.மழைநீர் செல்ல வழியில்லாததால் கழிவுநீருடன்கலந்து தேங்கியது.



இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.திருவாடானைதிருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பமாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அரை மணி நேரம் மழை பெய்தது. வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் வெப்பம் குறையவில்லை.மழையால் நிலங்களில் ஈரப்பதமாக இருப்பதால் இன்னும் சில தினங்களில் கோடை உழவு துவங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X