கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
22:46

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட மேல்பனையூர், கொசக்குடி, கருங்களத்துார், திருப்பாலைக்குடி பழங்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில், கொரோனா பாதிப்புடன் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



குறிப்பாக வெளியூர்களிலிருந்து கிராம பகுதிகளுக்கு வரும் நபர்கள் மூலமே கொரோனா தொற்று பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தொற்று பரவலை தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X