'நீங்கள் இன்றி நாங்கள் இல்லை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2021
00:40

திருப்பூர்:'தொழிலாளர் இன்றி நாங்கள் இல்லை; இக்கட்டான சூழலில் தொழிலாளருக்கு உதவ காத்திருக்கிறோம்' என்று ஆடை உற்பத்தியாளர்கள், நெகிழ்ச்சியுடன் கூறினர்.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், மதுரை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி போன்ற வெளி மாவட்டம்; ஒடிசா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட வெளி மாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.இன்று முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், திருப்பூரில், ஏற்றுமதி ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் இயங்கும்.லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:முழு ஊரடங்கால், திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் இயங்க முடியாது. ஆர்டர் இல்லாத ஏற்றுமதி நிறுவனங்களும் இயக்கத்தை நிறுத்துகின்றன.இதனால், ஏராளமான தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழக்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, வேலை இழப்பு; உணவு பொருட்கள் பற்றாக்குறையால், வடமாநில தொழிலாளர் மிகவும் சிரமப்பட்டனர். இந்த கசப்பான அனுபவமே, தொழிலாளரை தற்போது சொந்த ஊர் நோக்கி புறப்படத்துாண்டுகிறது.இக்கட்டான இந்த சூழலில், ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தொழிலாளர்களுக்கு கைகொடுக்க வேண்டும். தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தங்குமிடம், உணவு பொருட்கள், இதர அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க செய்யவேண்டும்.வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு, நிறுவனங்கள், அட்வான்ஸ் தொகை வழங்கி உதவலாம். ஊரடங்கு காலத்தில், தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட செய்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.கொரோனா பாதிப்பு நீங்கி இயல்புநிலை திரும்பும்போது, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால், ஆடை உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்படும். உற்பத்தி செலவு அதிகரிப்பு, குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிக்க முடியாமை உட்பட அடுக்கடுக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.எத்தகைய சூழலிலும் திருப்பூர் பின்னலாடை துறை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையை தொழிலாளர் மத்தியில் விதைக்க வேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறைசார்ந்த இன்னல்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'திருப்பூரில் எப்போதும் உரிமையாளர்கள், தொழிலாளர்களை தங்களிடம் இருந்து பிரித்து பார்ப்பதில்லை. அவர்கள் இன்றி, நாங்கள் இல்லை. அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை; நிச்சயம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
10-மே-202115:45:43 IST Report Abuse
SENTHIL NATHAN நீங்கள் இன்றி நாங்கள் இல்லை'இது சரியாக நடை முறை படுத்தி இருந்தால் தொழிலாளர்கள் அவரவர்கள் ஊருக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X