ஊரடங்கில் வீட்டில் இருந்து.. சங்கிலியை துண்டிப்போம்! தொற்று பரவலை தடுப்போம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

10 மே
2021
01:51
பதிவு செய்த நாள்
மே 10,2021 00:46

கோவை:இன்று தொடங்கி, 14 நாட்கள் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை, மக்கள் முழுமையாக பின்பற்றினால் மட்டுமே, கோவையில் கொரோனா தொற்று, கட்டுக்குள் வரும்.கோவையில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.



தற்போதைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தை சேர்ந்த 6806 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்த 4102 பேரும், கோவையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லை; ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில்லை; ரெம்டெசிவிர் மருந்தும் தட்டுப்பாடு, இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு என, அடுத்தடுத்து எதிர்மறையான தகவல்களே வெளியாகின்றன.



இத்தகைய சிக்கல்களில் தப்பிக்க வேண்டுமெனில், குறைந்தபட்சமாக, இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு கண்டிப்பான கட்டுப்பாட்டுடன், வீட்டிலேயே இருப்பது நல்லது.மக்கள் அனைவரும், உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்காமல், வெளியிடங்களுக்கு செல்லாமல், 14 நாள் வீட்டில் முடங்கினால், கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.இதை கருத்தில் கொண்டுதான், மாநில அரசு, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.


பொதுமக்கள் தங்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளவும், ஊர்களுக்கு செல்லவும், நேற்றிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டது.இதை பயன்படுத்திக் கொண்டு, கோவை மாநகரில் ஏராளமானோர், நேற்று காய்கறி, மளிகை கடைகளில் திரண்டனர். சாலையோர காய்கறி கடைகள், கறிக்கடைகளிலும் விற்பனை ஜரூராக நடந்தது. அரசு டவுன் பஸ்கள் நேற்று இயக்கப்பட்டாலும், பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.



டாஸ்மாக் மதுக்கடைகளில், விற்பனை பரபரப்பாக நடந்தது. 'குடி' மகன்கள் பலர், கை நிறைய பாட்டில்கள், வாங்கிச் செல்வதை காண முடிந்தது.இப்படி அவகாசம் கொடுத்தபோது, பொருட்களை வாங்கி குவித்தவர்கள், அரசின் ஊரடங்கு உத்தரவுக்கும் கட்டுப்பட்டு வீட்டில் இருந்தால், கொரோனா தொற்று சங்கிலியை துண்டித்து, முழுமையாக நோயை கட்டுப்படுத்தி விடலாம்.


வீட்டில் இருப்பதே தீர்வு


கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றதற்கு காரணம் பொதுமக்களே. அரசு தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்களும் தங்களது பணியை திறம்பட மேற்கொண்டுள்ளனர். தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அனைவரும் வீட்டில் இருப்பதே தீர்வு,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
10-மே-202110:36:05 IST Report Abuse
siriyaar அனைத்து பெரும் நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்குகின்றன, அதனால் சிறுகுறு நிறுவனங்கள் மட்டுமே நிற்கின்றன. கோரோனா வழக்கம் போல் இயங்குகிறது.
Rate this:
ram - ,
10-மே-202112:48:59 IST Report Abuse
rampol valaya paru...
Rate this:
Cancel
10-மே-202107:50:48 IST Report Abuse
ஆப்பு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஒரு 10 நாள் வீட்டில் முடங்கிப் பாருங்க... இல்லே, முடங்கி இருப்பவர்கள் அனைவருக்கும் சோறு, தண்ணிக்கு ஏற்பாடு செய்யுங்க. எல்லோருக்கும் 4000 ரூவாய தொளபதியை வுட்டு குடுக்கச் சொல்லுங்க. தவிர, வேலை இல்லாதோரை போலூஸ், களப்பணியாளர் வேலையில் சேத்துக்கச் சொல்லுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X