அந்தந்த பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு புது அமைச்சரிடம் கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:14

கோவை:பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், இன்று ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அந்தந்த பள்ளிகளையே தேர்வு மையங்களாக அறிவிக்க வேண்டுமென, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதிதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இன்று அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும், பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்பது குறித்தும், ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்ற வகுப்புகளை போல அல்லாமல், உயர்கல்விக்கான படிப்புகள் தேர்வு செய்ய வேண்டியிருப்பதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.குறிப்பாக, இதில் பெறும் கட்-ஆப் மதிப்பெண்கள் கொண்டு தான், இன்ஜி., மற்றும் 'புரோபஷனல்' படிப்புகளை, மாணவர்களால் தேர்வு செய்ய முடியும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, கல்வியாளரும், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாநில ஆலோசகருமான பாலகிருஷ்ணன் கூறியதாவது:ஜூலை மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தலாம். அதற்குள் தொற்று வீரியம் குறைந்துவிடும். தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசும் மாற்று ஏற்பாடு செய்ய அவகாசம் கிடைக்கும்.ஆன்லைன், ஆப்லைன் என இருவழிகளில் தேர்வு நடத்த, பரிந்துரைப்பது சரியான தீர்வாக அமையாது. ஆன்லைன் மூலம், தேர்வு நடத்துவதாக இருந்தால், 'டிஸ்கிரிப்டிவ் டைப்' எனும், நீண்ட பதில்கள் எழுத வேண்டிய கேள்விகளுக்கு விடையளித்து, அதை சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.அந்தந்த பள்ளிகளை தேர்வு மையமாக அறிவித்து, உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்தாலே போதும். இத்தேர்வில் பங்கேற்க முடியாதோருக்கு, உடனடி பொதுத்தேர்வும் உடனே நடத்தி, பிறகு ரிசல்ட் வெளியிட்டால், உயர்கல்வியில் சேர சிக்கல் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X