தயக்கம் காட்டிய உறவினர்கள் களமிறங்கிய ஊராட்சி தலைவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:27

பொன்னேரி : கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இறந்தவரின் சடலத்தை புதைக்க, கூலியாட்கள், உறவினர்கள் தயங்கிய நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் கவச உடை அணிந்து, இறுதி சடங்குகளை மேற்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சையில் இருந்த, 45 வயது பெண் ஒருவர், நேற்று காலை இறந்தார்.தனியார் மருத்துவமனையில் இருந்து, பாதுகாப்பாக இறந்தவரின் சடலம், ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு நேரிடையாக கொண்டு வரப்பட்டது. அங்கு, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டு இருந்தது. தொற்று அச்சம் காரணமாக, ஆம்புலன்சில் இருந்த சடலத்தை கீழே இறக்கி, பள்ளத்திற்கு கொண்டு சென்று புதைக்க கூலியாட்கள் யாரும் முன் வரவில்லை.



உறவினர்கள் சடலத்தின் அருகில் வருவதற்கே தயங்கினர்.தகவல் அறிந்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு அங்கு சென்று, கவச உடைகளை அணிந்து கொண்டு, களத்தில் இறங்கினார். அவருடன் சென்ற வார்டு உறுப்பினர் பாலாஜி, சமூக ஆர்வலர் பிரேம்குமார் மற்றும் ஜெய்கிருஷணன் ஆகியோர், கவச உடைகளை அணிந்து கொண்டு ஆம்புலன்சில் இருந்த சடலத்தை இறக்கினர்.பின், பள்ளத்தில் கயிறு மூலம் கீழே இறக்கி, சுகாதாரத் துறையினர் வழிகாட்டுதல்களை பின்பற்றி புதைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X