நர்சுகளுக்கு கொரோனா தொற்று நகராட்சி அரசு மருத்துவமனை மூடல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
நர்சுகளுக்கு கொரோனா தொற்று நகராட்சி அரசு மருத்துவமனை மூடல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:37

விழுப்புரம் : இரண்டு நர்சுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விழுப்புரம் நகராட்சி அரசு மருத்துவமனை இரண்டு நாட்கள் மூடப்பட்டுள்ளது.விழுப்புரம் நகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.



இந்நிலையில், விழுப்புரம் நகராட்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.இங்கு ஒரு மருத்துவ அலுவலர் தலைமையில் டாக்டர்கள், நர்சுகள் பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த ஏப்., 1,325 பேருக்கும், கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 675 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு நர்சுகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.



இதனால், நேற்று மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மருத்துவமனை இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் மூடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனையின் சில ஊழியர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டுள்ளதால், பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X