8ம் இடம்! மாநில அளவில் கடலூர் மாவட்டம்...1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:39

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மாநில அளவில் கடலுார் மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது.


தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இன்று முதல் வரும் 24ம் தேதி முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடலுார் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி 39 ஆக இருந்த கொரோனா தொற்று, நேற்று முன்தினம் 519 ஆக உயர்ந்தது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. 30 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதித்து நேற்று முன்தினம் வரை 357 பேர் இறந்துள்ளனர்.


இதில், நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 9 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக மருத்துமனைகளில் பணிபுரியும், டாக்டர்கள், செவிலியர்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்டமாக போலீஸ், வருவாய்த் துறையினர், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.அதன்பிறகு 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் வரை 65 லட்சத்து 60 ஆயிரத்து 449 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதில் மொத்த தடுப்பூசி போட்டுள்ளதில் சென்னை, கோயம்புத்துார், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, சேலம், வேலுார் மாவட்டங்களுக்கு அடுத்ததாக 8 வது இடத்தில் கடலுார் மாவட்டம் உள்ளது.அதன்படி, ஆண்கள் 68 ஆயிரத்து 921 பேர், பெண்கள் 52 ஆயிரத்து 172 பேர், இதரர் 14 பேர் என, ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 554 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 436 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 31 ஆயிரத்து 118 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 107 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 40 ஆயிரத்து 447 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். 18 முதல் 30 வயது வரை 4,677 பேரும், 40 முதல் 45 வயது வரை 13 ஆயிரத்து 100 பேரும், 45 முதல் 60 வயது வரை 62 ஆயிரத்து 438 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 ஆயிரத்து 881 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.நேற்று மட்டும் 255 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhura - chennai,இந்தியா
10-மே-202116:58:31 IST Report Abuse
vidhura SBI employee, my son ( age less than 45)in Cuddalore district is unable to get vaccine as we are unable to book online...the branch has seen their other employees infected in October, December and now last week too...3 times he had to test but by God's grace , results were not positive......The unions of banks and HR are not bothered about the employees who are facing customers since last year till date .....we parents , senior citizens get tension when every other employee if the Branch is infected....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X