முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 1500 போலீசார்: எஸ்.பி., தகவல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 1500 போலீசார்: எஸ்.பி., தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:42

விழுப்புரம் : பொதுமக்களிடம் போலீசார் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என எஸ்.பி., ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது;கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது. இந்த ஊரடங்களில் தேவைகளின்றி வெளியில் சுற்றுவோரை கண்காணிக்க மூன்று ஷிப்ட் சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு சுழற்சிக்கு 500 போலீசார் பணியில் இருப்பர்.மாவட்ட எல்லைகளில் 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.



போலீசார் அதிகம் மதுபாட்டில் வாங்கும் நபர்களை கண்காணித்து, அவர்களின் விவரங்களை சேகரித்துள்ளனர். முழு ஊரடங்கில் மதுபாட்டில்கள், சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், நேற்று முன்தினம் மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்ற 42 பேர் மீது வழக்குப்பதிந்து, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து 994 மதுபாட்டில்கள், 541 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பாதுகாப்பில்லாத டாஸ்மாக் கடைகளில்இருக்கும்மதுபாட்டில்களை குடோனிற்கு ஏற்றிவர டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X