கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:46

திண்டிவனம் : திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் இறந்தார். திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஹரிஷ், 15;. அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.



நேற்று காலை 11;00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த சுஜித் 10; கமலேஷ் 10; ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். குளித்து விட்டு அனைவரும் மேலே ஏறி வந்து விட்டனர். கிணற்றின் மேல்கட்டையில் ஹரிஷ் நின்று கொண்டு உடை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஹரிஷ் தடுமாறி கிணற்றுக்குள் இருந்த கட்டையில் விழுந்து, பலத்தகாயமடைந்த நிலையில் நீருக்குள் மூழ்கி இறந்தார். போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வெள்ளிமேடுப் போட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X