திருக்கோவிலுாரில் பொருட்கள் வாங்க குவிந்த கூட்டத்தால் அச்சம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
திருக்கோவிலுாரில் பொருட்கள் வாங்க குவிந்த கூட்டத்தால் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:47

திருக்கோவிலுார் : முழு ஊரடங்கை முன்னிட்டு திருக்கோவிலுார் கடைவீதியில் பொதுமக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.



தமிழகத்தில் இன்று முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று திருக்கோவிலுாரில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக வடக்கு வீதியில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.மளிகை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் முண்டியடித்து கொண்டு கூடியதால் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.



போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினார். இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X