விழுப்புரம் மாவட்டத்தில் 383 பேருக்கு கொரோனா பாதிப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரம் மாவட்டத்தில் 383 பேருக்கு கொரோனா பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:48

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதித்தோர் எண்ணிக்கை 22,424 ஆக உயர்ந்துள்ளது.



விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம், வண்டிமேட்டைச் சேர்ந்த 79 வயது முதியர். மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல்மலையனுாரை சேர்ந்த 71 வயது முதியவர் என இருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.



மாவட்டத்தில் நேற்று, 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 22,424 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, நோயில் இருந்து குணமடைந்த 19,672 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X