ஏரியில் மீன் பிடித்ததில் தகராறு 4 பேர் கைது: 10 பேருக்கு வலை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஏரியில் மீன் பிடித்ததில் தகராறு 4 பேர் கைது: 10 பேருக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:49

வானுார், : கிளியனுார் அருகே ஏரியில் மீன் பிடிப்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.



கிளியனுார் அடுத்த ஓமந்துாரை சேர்ந்தவர் செல்வம், 44; இவர் அதே பகுதியில் உள்ள ஏரியை ஏலம் எடுத்து மீன் வளர்த்து வருகிறார். கடந்த 7ம் தேதி மொளசூர் காலனியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏரியில் மீன்பிடிக்க சென்றனர். இதை செல்வம், தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வத்தை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையறிந்த ஓமந்தூரை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர், அந்த கும்பலை பதிலுக்கு தாக்கி மிரட்டினர்.



இதில் இரு தரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.செல்வம் புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் மொளசூர் காலனியை சேர்ந்த பிரதீப், 25; தீனா, 21, தினேஷ், 21; இளங்கோ, முருகன், பிரபாகர், குமரன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிதீப் புகாரின் பேரில் ஓமந்தூரை சேர்ந்த சதீஷ், 35; செல்வம், 44; சுரேஷ், 33; சக்திவேல், ஏழுமலை, வெங்கடேசன் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த முருகன், பிரகாஷ், செல்வம், சுரேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X