முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
05:41

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே நிலம் தொடர்பான முன்விரோத தகராறில் முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூரைச் சேர்ந்தவர் சடையவேல்,60; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அய்யாசாமிக்கும் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.கடந்த 4 ம் தேதி காலை 6 மணிக்கு சடையவேல் தனது நிலத்திற்கு சென்றபோது அய்யாசாமி, அவரது மகன் கண்ணன், மனைவி சிவகாமி ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி, கிணற்றின் மின் மோட்டார், பைப் லைன் ஆகியவற்றை சேதப்படுத்தினர். வரஞ்சரம் போலீசார் அய்யாசாமி உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X