எலிபேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
எலிபேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
05:41

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் எலிபேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.



கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரைச் சேர்ந்தவர் கண்ணன்,75; இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 6 ம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடன் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.இதில், மனமுடைந்த கண்ணன், வீட்டில் இருந்த எலிபேஸ்ட் எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X