எஸ்.ஐ.,க்கு மிரட்டல் வாலிபர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
எஸ்.ஐ.,க்கு மிரட்டல் வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
05:45

கடலுார் " சப் இன்ஸ்பெக்டரை கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார், சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த, புதுச்சோி மாநிலம், சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த விஜய், 29; என்பவரை நிறுத்தி விசாரித்தனர். ஆத்திரமடைந்த விஜய், கத்தியைக் காட்டி மணிகண்டனை மிரட்டினார். உடன் அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X