நகைக் கடையில் செயின் திருடிய 2 பெண்கள் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2021
05:52

திண்டிவனம் : திண்டிவனத்தில் நகைக்கடையில் மூன்று சவரன் செயின் திருடிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிருஷ்ணப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமநாதன்,40. அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 21ம் தேதி, இவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து, மூன்று சவரன் செயினை திருடிச்சென்றனர். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர்.திண்டிவனம் போலீசார் நேற்று மயிலம் ரோட்டில், ரோந்து சென்றனர். அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இரு பெண்களை நிறுத்தி விசாரணை செய்தனர்.


அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், கொற்கை கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் மனைவி ஷீலாதேவி, 37; கொடநாடு கிராமத்தை சேர்ந்த கனகசபை மனைவி கவிதா, 46; என தெரியவந்தது.திண்டிவனம் ராமநாதன் கடையில் மூன்று சவரன் நகையை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, மூன்று சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X