சோத்துப்பாறை அணைக்கு வினாடிக்கு 1006 கனஅடி நீர் வரத்து | தேனி செய்திகள் | Dinamalar
சோத்துப்பாறை அணைக்கு வினாடிக்கு 1006 கனஅடி நீர் வரத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
06:53

பெரியகுளம் : சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் அதிகபட்சமாக வினாடிக்கு 1006 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.



இந்த அணைக்கு கொடைக்கானல், அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் நீர் வரத்துள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28. அடி. தற்போது பெய்யும் தொடர் மழையால் மே 4ல், அணை நிரம்பி 6 வது நாளாக மறுகால் பாய்ந்தது.மூன்றாண்டுகளுக்கு பிறகு:நேற்று முன்தினம் இரவு 11:30 மணி முதல் நேற்று காலை 6:30 வரை அணைக்குவினாடிக்கு1006 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டது.



இதனைஅப்படியே வராகநதியில் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேம்பாலங்களை தொடும் அளவில் சென்றது.காலை 6:35 மணிக்கு வினாடிக்கு 503 கனஅடியாக குறைந்தது.2019 மே 9 ல் அணையின் நீர் மட்டம் 73.26, 2020 மே 9 ல் 96.25. நேற்று முன்தினம் மழையளவு 25 மி.மீ., 2018 க்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X