மின்விபத்து தவிர்க்க ஆலோசனை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மின்விபத்து தவிர்க்க ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
06:54

வடமதுரை : 'கோடை மழையில் மின்விபத்துகளை தவிர்ப்பது' குறித்து, வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆலோசனை வழங்கினார்.



அவர் கூறியது: வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. அப்போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லவோ, தொட முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள், மின் கம்பிகள் அடியிலோ நிற்க கூடாது.



பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையலாம். டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, அலைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மின்மாற்றிகள்,மின் கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது என, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X