தடுப்பணை பராமரிப்பு பணி | தேனி செய்திகள் | Dinamalar
தடுப்பணை பராமரிப்பு பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
06:55

மூணாறு : கேரளா மூணாறில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பழைய மூணாறில் உள்ள மின்துறைக்குச் சொந்தமான ஹெட் ஒர்க்ஸ் தடுப்பணை பராமரிப்பு பணியால் வர்ணம் பூசப்பட்டு பளிச்' என உள்ளது.



ஆசியாவில் முதல் நீர்மின்நிலையம் திட்டமான பள்ளிவாசல் நீர்மின் நிலையத்திற்கு பழைய மூணாறில் முதிரைபுழை ஆற்றின் குறுக்கே திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலமான 1940 ல் தடுப்பணை கட்டப்பட்டது. அங்கு தண்ணீர் தேக்கப்பட்டு சுரங்கம் மற்றும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பள்ளிவாசல் நீர்மின் நிலையத்தில் 375 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.மூணாறின் நுழைவுப்பகுதியில் உள்ள அணை நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை என்பதால் களை இழந்து காணப்பட்டது.



தற்போது ரூ.3 லட்சம் செலவில் அணையில் வர்ணம் பூசப்பட்டு ஒரு சில பராமரிப்பு பணிகள் நடந்ததால் அணை பளிச் என உள்ளது. அணையில் மூன்று மதகுகளில் ஒன்று பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகியும் பராமரிக்கப்படாததால் அதன் வழியாக தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை சீரமைக்க வேண்டும் என்றால் தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.தற்போது பள்ளிவாசல் நீர்மின் நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதற்கு அணையின் தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என்பதால் அப்போது மதகு சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X