காப்பீடு திட்டத்தில் வருவாய் வரம்பை அதிகரிக்க வலியுறுத்தல் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
காப்பீடு திட்டத்தில் வருவாய் வரம்பை அதிகரிக்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
07:20

பழநி : 'முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சேர வருமான வரம்பை அதிகரிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.



கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பாதித்தோருக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இத்திட்டத்தில் பயன் பெற, ரேஷன் கார்டுதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



தற்போது தொற்று சூறாவளி வேகத்தில் பரவி வருவதால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். ஏழை மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியாக, ஆண்டு வருமான வரம்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X