திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தொழிலதிபர் கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த ராம்குமார் 43. இவர் முருகபவனம் அருகே உள்ள லாரி நிறுத்துமிடம், அப்பகுதியில் உள்ளபலவீடுகளுக்கும் உரிமையாளர். நேற்று முன்தினம் தனது டூவீலரில் வீடு திரும்பும் போது பழநி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார்.தாய் சித்ரா புகாரில் மேற்கு போலீசார் விசாரணையில், திண்டுக்கல் கவடகாரத்தெரு மணிகண்டன் 29, பாலகிருஷ்ணாபுரம் சிவராஜா 34, ஆர்.வி., நகர் கோகுல் 21, குணசீலன் 23, சதிஷ்குமார் 22, மேற்கு அசோக் நகர் சசிகுமார் 22, ஒய்.எம்.ஆர்., பட்டி சஞ்சய் 22 ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில்,'ஏழுபேரும் ராம்குமாரோடு ஏற்கனவே தொடர்பில் இருந்தவர்கள்.பணம் பறிக்கும் எண்ணத்தில் அவரைமிரட்டியுள்ளனர்.அவர்பணம் தர மறுத்ததால், மது போதையில் இருந்தவர்கள் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியது',தெரியவந்தது.