பிச்சை சித்தர் மறைவு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பிச்சை சித்தர் மறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
07:23

கன்னிவாடி : உடல்நலக்குறைவால் இறந்த திண்டுக்கல் பிச்சை சித்தரின் உடல் குஞ்சனம்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.



திருவண்ணாமலையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாக்கியநாதன் 70. இவர் 30 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் வெள்ளைவிநாயகர் கோயில் பகுதிக்கு வந்தார். பக்தர்களின் காணிக்கையை வழிபடுவோருக்கு தானம் வழங்கியதால் 'பிச்சை சித்தர்' என்றும், காணிக்கையாக மூக்குப்பொடியை பெற்றதால் 'மூக்குப்பொடி சித்தர்' என்றும் அழைக்கப்பட்டார்.



அவரிடம் ஆசிபெற, இரவு பகலாக பக்தர்கள் காத்திருப்பர். இரு தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை, உறவினர்கள் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றனர்.மே 7ம் தேதி அவர் உயிர் பிரிந்த நிலையில், கசவனம்பட்டி அருகே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது.



நேற்று முன்தினம் இரவு குஞ்சனம்பட்டி சாய்பாபா நகர் தனியார் தோட்டத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக உடல் வைக்கப்பட்டது. தேவார, திருவாசக பாராயணம், சிறப்பு பூஜைகளுடன் நேற்று காலை 11:10 மணிக்கு உடல் அடக்கம் நடந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X