பழநியில் ஆக்சிஜன் பற்றாக்குறை; நோயாளிகள் வீடியோ வைரல் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பழநியில் ஆக்சிஜன் பற்றாக்குறை; நோயாளிகள் வீடியோ வைரல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
07:24

பழநி : 'பழநி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ளது' என, நோயாளிகள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



பழநியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிலர்,'வார்டுக்கு டாக்டர்கள் வருவதில்லை. தேவையான ஆக்சிஜன் வழங்குவதில்லை. முறையான சிகிச்சைகளும் அளிப்பதில்லை'என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.



தலைமை மருத்துவர் உதயகுமார் கூறியது: ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டாக்டர்கள் 6 பேர் பணியில் உள்ளனர். அவர்கள் பாரபட்சமின்றி அனைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். தேவைக்கேற்ப ஆக்சிஜன் இருப்பு உள்ளது. கொரோனா வார்டு பகுதிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இதனால் அவர்களையும் தொற்று பாதிக்க வாய்ப்புள்ளது, என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X