சேதமடைந்த ரோடால் சிரமம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
சேதமடைந்த ரோடால் சிரமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
07:26

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழே செல்லும் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.



கரூர், வேடசந்தூர் வழித்தடங்களில் வரும் வாகனங்கள் ஒட்டன்சத்திரம் செல்ல, செக்போஸ்ட் மேம்பாலத்தின் கீழ் சென்று பழநி ரோட்டை அடைய வேண்டும். திண்டுக்கல் ரோட்டிற்கும் இந்த வழியாகத் தான் செல்ல வேண்டும்.இந்த ரோட்டில் இருசக்கரம், சரக்கு வாகனங்கள், பஸ் போக்குவரத்து அதிகமாக உள்ளது.



இந்த ரோட்டுடன் பாச்சலூர் ரோடு இணையுமிடம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த இடத்தில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இந்த ரோட்டின் அருகிலேயே நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. இருந்தும் ரோட்டை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X