எச்சரிக்கை! ஊரடங்கை மீறி வெளியே சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
எச்சரிக்கை! ஊரடங்கை மீறி வெளியே சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
07:26

கொரோனா பரவலை தடுக்க, இன்று (மே 10) முதல் மே 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் மதியம் 12:00 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் அவசர தேவைகள் தவிர வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



மாவட்டம் முழுவதும் போலீசார், ஆயுதப்படை, ஊர் காவல் படையினர் என 2,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள 11 சோதனை சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இ-பாஸ்' இன்றி வருவோருக்கு அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ், அவசர வாகனங்களில் வருவோரின் உடல் வெப்பநிலை, அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்த பிறகே அனுமதிக்கப்படுவர். ஒரு ஸ்டேஷனுக்கு 2 இடங்களில் வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



குறிப்பிட்ட இடைவெளிக்கு காவல் உதவி மைய போலீசார் நிரந்தரமாக இருப்பர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, தொற்று நோய் சட்டத்தின் படி வழக்கு பதியப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X