கும்பாபிேஷகம் ஒத்தி வைப்பு  | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கும்பாபிேஷகம் ஒத்தி வைப்பு 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
07:26

கன்னிவாடி : ஊரடங்கை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுருசுவாமி கோயில் கும்பாபிேஷகத்தை கோயில் நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது.



கசவனம்பட்டி மவுனகுரு சித்தர் 1982 அக்.22ல் ஜீவசமாதியானார். மவுன குருசுவாமிகள் டிரஸ்ட் சார்பில் கோயில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் ஐப்பசி மூல நட்சத்திரத்தில் குருபூஜை விழா, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சஷ்டி விழாக்களில் சிறப்பு ஆராதனை நடக்கிறது.கோயில் விரிவாக்க திருப்பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. சமீபத்தில் பாலாலய விழா நடந்த நிலையில் மே 24ம் தேதி கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க, வரும் மே 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பதால், கும்பாபிேஷகம் ஒத்தி வைக்கப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X