மருத்துவமனைகளில் கட்டணம் ஆய்வு செய்ய குழு! அதிரடி நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2021
06:17

கடலுார் : கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 500 பேர் என்ற அளவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி பகுதி அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும், 3,567 படுக்கை வசதிகளுடன் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாலும், சிகிச்சை மையங்களில் இடவசதி இல்லாததாலும், கொரோனா பாதித்தவர்கள் பரிதவித்து வருகின்றனர்.



இதனால், சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் பகுதிகளில் 7 மருந்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மூலம் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில், கூடுதலாக 5 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.



இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் இடவசதி இல்லாததால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக அளவில் செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.



இதுகுறித்து, கடலுார் மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைடுத்து, 'கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.



மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவினர், மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில், திடீர் ஆய்வு நடத்தி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X