ஊராட்சி தலைவி வீட்டிற்குள் புகுந்த வேன் | கடலூர் செய்திகள் | Dinamalar
ஊராட்சி தலைவி வீட்டிற்குள் புகுந்த வேன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 மே
2021
06:19

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ஊராட்சி தலைவி வீட்டிற்குள் மினி வேன் புகுந்த விபத்தில், டிரைவர், கிளீனர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஊராட்சி தலைவியின் குடும்பம் உயிர் தப்பியது.



கும்பகோணத்தில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வழியாக காய்கறி ஏற்றிய மினி வேன் திட்டக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டது. அதிகாலை 3:30 மணியளவில் கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர், காமராஜர் நகர் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள சசிக்குமார், 27; ஓட்டு வீட்டிற்குள் புகுந்தது.



அப்போது, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த முருகன்குடி ஊராட்சி தலைவி ரம்யா, 23; இவரது கணவர் சசிக்குமார் ஆகியோர் காயமின்றி தப்பினர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த தஞ்சாவூர் மாவட்டம், வஞ்சனுாரைச் சேர்ந்த டிரைவர் அருள்சாமி மகன் அபிமன்யூ, 19; கிளீனர் பழனி மகன் மனோராஜ், 19; ஆகிய இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தகவலறிந்து காலை 7:00 மணியளவில் வந்த பெண்ணாடம் போலீசார் பொக்லைன் உதவியுடன் வேனை அகற்றினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X