வாகனம் பறிமுதல்: எஸ்.ஐ., மீது புகார் | சேலம் செய்திகள் | Dinamalar
வாகனம் பறிமுதல்: எஸ்.ஐ., மீது புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 மே
2021
15:09

தலைவாசல்: விவசாயி வாகனத்தை பறிமுதல் செய்து, எஸ்.ஐ., அடாவடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. தலைவாசல், வேப்பநத்தத்தை சேர்ந்த விவசாயி அன்பரசு, 32. இவர், கோவிந்தம்பாளையத்தில் இருந்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஆம்னி வேனில் விவசாய பொருட்களை எடுத்துக்கொண்டு தலைவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தார். மும்முடியில், தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அபராதம் விதித்து, அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, அன்பரசு கூறியதாவது: கடலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றேன். முக கவசம் அணியாததால், 200 ரூபாய் அபராதம் கொடுக்க, எஸ்.ஐ., சிவகுருநாதன் கூறினார். ரசீது கொடுத்தால் பணம் தருவதாக கூறினேன். அதற்கு ரசீது கேட்கிறாயா என கேட்டு அபராதம் விதித்தார். ஆர்.சி., புக், லைசன்ஸ் கேட்டார். கையில் அசல் ஆவணம் இல்லாததால், மொபைல் செயலியில் உள்ள ஆவணத்தை காட்டுவதாக கூறினேன். அதை ஏற்க முடியாது என்று கூறி, கையில் இருந்த வண்டி சாவியை பறித்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு, அவரே வேனை ஓட்டிச்சென்றார். ஒருமையில் பேசி, மிரட்டலும் விடுத்தார். ஸ்டேஷனில், செயலியில் உள்ள வண்டி ஆவணங்களை போலீசாரிடம் காட்டியபின், வண்டியை விடுவித்தனர். ஆனால், அரசு உத்தரவை மீறி, வண்டியை பறிமுதல் செய்து அலைக்கழித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X