பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு வழங்கும் மானியம்: ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ரூபாயாக உயர்த்த கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2021
15:24

சேலம்: டவுன் பஸ்களில், பெண்களின் இலவச பயணத்துக்கு, அரசு சார்பில் வழங்கும் மானியத்தை, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாயாக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அரசின் கொள்கை விளக்க குறிப்பேடு தகவல்படி, 2020 - 21 நிதியாண்டில், 20 ஆயிரத்து, 944 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், அதில், 10 ஆயிரத்து, 75 டவுன் பஸ்கள். அதன் தினசரி வருவாய், கொரோனா பரவலுக்கு முன், 2020 ஜனவரியில், 29 கோடி ரூபாய். கொரோனாவுக்கு பின், 18 கோடி ரூபாயாக சரிந்தது. போக்குவரத்துக்கழகங்கள் பற்றாக்குறை இல்லாமல் செயல்பட வேண்டும் எனில், தினசரி வருவாய், 38 கோடி ரூபாய்க்கு வரவேண்டும். இதில், புறநகர் பஸ்கள் மூலம், 48 சதவீதம் வருவாய் கிடைக்கும் நிலையில், 52 சதவீதம் நகர பஸ்கள் மூலமே கிடைக்கிறது. பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால், போக்குவரத்துக்கழகங்களுக்கு ஆண்டுதோறும் கிடைத்து வந்த, 1,700 கோடி ரூபாய் இழப்பாக அமையும். அரசு சார்பில், 1,200 கோடி ரூபாய் மானியமாக வழங்கினாலும், 500 கோடி பற்றாக்குறையாக அமைந்தால், ஏற்கனவே நிதி தள்ளாட்டத்தில் திணறும் போக்குவரத்து நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும். இதனால், இலவச பயண திட்டத்துக்கு வழங்கும் மானியத்தை, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X