சேலம் கோட்ட பஸ்களில் 2 நாளில் 4 லட்சம் பேர் பயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2021
15:24

சேலம்: சேலம் கோட்ட பஸ்களில், இரு நாளில், 4 லட்சம் பேர் பயணம் செய்தனர். தமிழகத்தில் வரும், 24 வரை முழு ஊரடங்கால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, சேலம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில், கடந்த, 8, 9ல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரு நாளும், தலா, 200 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. தொழில் நிமித்தமாக சென்ற பலர், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் பஸ் ஸ்டாண்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.


இதுகுறித்து, சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னை, நாமக்கல், தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும், 42 பஸ்களில் இருந்து, கூடுதலாக, 40 பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து பலர் சேலம் வந்தனர். இங்கிருந்து, அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றனர். இரு நாளில், 4 லட்சம் பேர் பயணித்தனர். இதன் மூலம், 3 கோடியே, 20 லட்சம் ரூபாய் வசூலானது. இன்று(நேற்று) முழு ஊரடங்கால் பஸ்கள் இயக்கப்படவில்லை. சேலம் மாநகராட்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு மட்டும், தலா, இரு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X