முழு ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்களை வாடகைக்கு விட அனுமதி | சேலம் செய்திகள் | Dinamalar
முழு ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்களை வாடகைக்கு விட அனுமதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 மே
2021
15:25

முழு ஊரடங்கால் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்களை வாடகை அடிப்படையில் இயக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா முதல் அலையின்போது, 2020 மார்ச் முதல் பஸ்கள் நிறுத்தப்பட்ட நிலையில், மே முதல் பஸ்களை வாடகைக்கு விட, அப்போதைய போக்குவரத்து துறை முதன்மை செயலர் உத்தரவிட்டார். அதில் கூறியிருந்ததாவது: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொழிற்சாலை, ஐ.டி., தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த, அரசு பஸ்களை வாடகைக்கு வழங்கலாம். நகர, புறநகர் பஸ்களில், ஏசி வசதி இல்லாதவைக்கு, 100 கி.மீ., தூரம், ஒரு நாளைக்கு, 4,000 ரூபாய், 150 கி.மீ., தூரம் வரை, 6,000, 200 கி.மீ., தூரம், 8,000 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே பஸ்களில், 'ஏசி' வசதியுள்ளவைக்கு, 100 கி.மீ., தூரத்துக்கு, ஒரு நாளைக்கு, 6,000 ரூபாய், 150 கி.மீ., தூரம் வரை, 8,000 ரூபாய், 200 கி.மீ., தூரத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெடுந்தூரம் செல்லும் விரைவு போக்குவரத்து பஸ்களில், 'ஏசி' வசதி இல்லாதவைக்கு, 100 கி.மீ., தூரத்துக்குள், ஒரு நாளைக்கு, 4,500 ரூபாய், 150 கி.மீ., தூரம் வரை, 6,750 ரூபாய், 200 கி.மீ., தூரத்துக்கு, 9,000 ரூபாய் வாடகையுடன், வரி கூடுதலாக செலுத்த வேண்டும். அதே ஏசி பஸ்களுக்கு, 100 கி.மீ., தூரத்துக்குள், ஒரு நாளைக்கு, 6,000 ரூபாய், 150 கி.மீ., தூரம் வரை, 8,000 ரூபாய், 200 கி.மீ., தூரத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் வாடகையுடன், வரி கூடுதலாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


தற்போது, கொரோனா இரண்டாம் அலையை தடுக்க, நேற்று முதல் பஸ்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு நிர்ணயித்த தொகைப்படி, வாடகை அடிப்படையில் பஸ்களை இயக்கிக்கொள்ள, மேலாண் இயக்குனர்கள், நேற்று, கிளை மேலாளர்களுக்கு அனுமதி வழங்கி வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால், அரசு பஸ்களை வாடகைக்கு எடுக்க விரும்புவோர், அந்தந்த கோட்ட, மண்டல நிர்வாக இயக்குனர்கள், வணிக பிரிவு மேலாளர்கள், கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்.


- நமது நிருபர் -


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X